தமிழ்நாடு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலி

1st Oct 2022 08:54 AM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமம் செய்யாறு சாலையில் வசித்து வருபவர் விவசாயி சரவணன்(50). இவரது மனைவி சாந்தி(45).

இவர்கள் இருவரும் சனிக்கிழமை காலை தங்கள் நிலத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து மின்கம்பத்தில் மின்சாரக் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.

அதனை கவனிக்காமல் அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்துள்ளனர். அதில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

ADVERTISEMENT

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT