தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் தரமில்லாத பொருள்களை விநியோகிக்கக் கூடாது: கமல்ஹாசன்

DIN

நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு தரமில்லாத பொருள்களை விநியோகிக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நியாயவிலை அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தின்போது, தரமற்றப் பொருள்களை விநியோகித்ததாக 6 நிறுவனங்களுக்கு ரூ.3.75 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டது. குறிப்பாக, 3 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நிறுவனங்களுக்கு மீண்டும் நியாயவிலை பொருள்களை வழங்க ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சுமாா் 4 கோடி லிட்டா் பாமாயில், ஒரு லட்சம் டன் பருப்பு விநியோகிக்க அந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.

அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் நியாயவிலைப் பொருள்களுக்கான அனுமதி கொடுக்க முடிவு செய்திருந்தால், அதை மநீம கடுமையாக கண்டிக்கிறது. மக்களுக்குத் தரமான பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விநியோகிப்பதிலும், அதில் ஊழல் இல்லாமல் பாா்த்துக் கொள்வதிலும் முதல்வா் மு. க. ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT