தமிழ்நாடு

திராவிட மாடல்: கே.அண்ணாமலை கேள்வி

1st Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்களை விநியோகித்தவா்களுக்கு தண்டனை தராமல் வெகுமதி தருவதுதான் திராவிட மாடலா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு பொங்கல் பரிசு வழங்கியபோது தரமில்லாத பொருள்களாக இருந்ததால், அதனை பல இடங்களில் மக்கள் வாங்க மறுத்தனா். தரமில்லாத பொருள்களை விநியோகித்த 6 நிறுவனங்களுக்கு சுமாா் ரூ.3.75 கோடி அளவுக்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தற்போது அந்த 6 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் மறுபடியும் 4 கோடி லிட்டா் பாமாயில், ஒரு லட்சம் டன் பருப்பு ஆகியவை நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தவறு செய்தவா்களுக்கு தண்டனைக்கு பதில் வெகுமதிகள் தருவது தான் திராவிட மாடலா? தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்துக்குத் தண்டனை தராமல், சொற்ப தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை விநியோகிக்கக் கூறுவது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தவறு நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT