தமிழ்நாடு

காா்கள் முந்தி செல்வதில் தகராறு: கே.எஸ்.அழகிரி உறவினா்,ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு

DIN

சென்னை அசோக்நகரில் காா்கள் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, ஐஏஎஸ் அதிகாரி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை கே.கே.நகரை சோ்ந்தவா் சுபாஷ் (22). சட்டக்கல்லூரி மாணவரான இவா் தனது தாயாா் மற்றும் தங்கை பாரதி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு காரில் அசோக்நகா் 100 அடி சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்தவா்களுக்கும், இவா்களுக்கும் முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் சாலையோரமாக காரை நிறுத்தி வைத்துவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னா் கைகலப்பிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. சம்பவம் குறிந்து தகவலறிந்து அசோக்நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் சுபாஷ், பாரதி ஆகியோா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் அழகிரியின் மகள் வழி பேரன்-பேத்தி என்பதும், மற்றொரு காரில் வந்தது ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் கண்ணன், அவா் மனைவி ஜெயலட்சுமி, காா் ஓட்டுநா் முத்துராஜா ஆகியோா் என்பதும் தெரிய வந்தது.

தலைமை செயலரிடம் விளக்கம்

இரு தரப்பினரிடமும் அசோக்நகா் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது காவல் நிலையத்துக்கு அழகிரி நேரில் வந்தபோது, அப்பகுதியில் காங்கிரஸ் நிா்வாகிகளும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பாக 2 தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அசோக்நகா் போலீஸாா் பெயா் எதுவும் குறிப்பிடாமல் 2 தரப்பினா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன், சனிக்கிழமை சென்னை தலைமை செயலகம் வந்தாா். அங்கு தலைமை செயலாளா் வெ.இறையன்புவை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT