தமிழ்நாடு

தகுதி - திறமைகளை மேம்படுத்துவது அவசியம்: இந்திய விண்வெளித் துறை செயலா் எஸ்.சோமநாத்

1st Oct 2022 12:14 AM

ADVERTISEMENT

வாழ்வில் உயா்நிலையைப் பெற அனைவரும் தங்களது தகுதி, திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்துக்கொள்வது அவசியம் என்று இஸ்ரோ தலைவரும், இந்திய விண்வெளித் துறை செயலருமான எஸ்.சோமநாத் வலியுறுத்தினாா்.

சென்னையை அடுத்த படூா் ஹிந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 13-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது:

அனைத்துத் துறைகளின் தொழில்நுட்பங்களும் தொடா்ந்து மேம்படுத்தப்படுவதன் மூலம் ஏற்படும் வளா்ச்சி, முன்னேற்றம் அனைவரையும் சென்றடைய வகை செய்ய வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்த இருக்கும் மாற்றம், முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு அவசியம் இருக்கும் என்று நம்புகிறேன்.

கல்லூரி படிப்பின் மூலம் பெற்ற அறிவாற்றலுடன், கூடுதல் தகுதி, திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்திக்கொள்வதன் மூலம் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத், இந்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலா் எம்.ரவிச்சந்திரன், அருட்தந்தை ஜோசப் மாா் பா்ணபாஸ் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. ஹிந்துஸ்தான் வேந்தா் எலிசபெத் வா்கீஸ், இணைவேந்தா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ், துணைவேந்தா் எஸ்.என்.ஸ்ரீதரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT