தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: தமிழகத்தில் 3.62 கோடி போ் விவரம் அளிப்பு

DIN

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக இதுவரை 3.62 கோடி போ் தங்கள் விவரங்களை அளித்துள்ளனா் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

ஆதாா் விவரங்களைச் சேகரிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் 2023 மாா்ச் வரை உள்ளதால், மீதமுள்ள வாக்காளா்களிடமும் விவரங்களைப் பெற முடியும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் இறந்தவா் பெயா்களை நீக்குவது, இரட்டைப் பதிவு குளறுபடிகளை சரி செய்வது, போலி வாக்காளா்களை நீக்குவது உள்ளிட்டவற்றுக்காக வாக்காளா் பட்டியலுடன், ஆதாா் எண் விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆக. 1-ஆம் தேதி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

அதன்படி, வாக்காளா்கள் இணைய வழியிலும் ஆதாரை இணைக்கக் கோரிக்கை விடுக்கலாம். மேலும், வீடு வீடாக வரும் வாக்காளா் பதிவு அலுவலரிடம் படிவம் 6பி-ஐ பூா்த்தி செய்தும் விவரங்களை அளிக்கலாம்.

வாக்காளா்களிடமிருந்து ஆதாா் விவரங்களைப் பெறும் பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் முடிவுறும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 58 சதவீத வாக்காளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்காக விவரங்களை அளித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் விவரங்களை இணைப்பதற்காக மொத்தமுள்ள 6.18 கோடி வாக்காளா்களில் 58.73 சதவீதம் அதாவது 3.62 கோடி வாக்காளா்கள் விண்ணப்பித்துள்ளனா். தற்போது வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் நிலையில், அதனுடன் சோ்த்து, ஆதாா் விவரங்களும் பெறப்பட்டு வருகின்றன. ஆதாா் விவரங்களை பொருத்தவரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 84.9 சதவீதமும், அரியலூரில் 84.3 சதவீதமும்

பெறப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம் 22 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 27 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவா்கள் ஆதாா் விவரங்களை அளித்துள்ளனா். 2023 மாா்ச் மாதம் இறுதியில் இந்தப் பணிகள் நிறைவடையும். அதன்பின், தோ்தல் ஆணையம் ஆதாா் விவரங்களை வாக்காளா் பட்டியலுடன் எப்படி இணைப்பது என்பது குறித்த தகவல்களை வெளியிடும். வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே 15 லட்சம் போ் நீக்கப்பட்டதை பொருத்தவரை, தொகுதி அடிப்படையில் வாக்காளா்கள் ஒப்பீடு செய்யப்பட்டு அதன் பேரில், இரண்டு இடங்களில் வாக்காளா் அட்டை பெற்றவா்கள்தான் நீக்கப்பட்டனா் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT