தமிழ்நாடு

கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்

DIN

சபரிமலை சீசனையொட்டி மகாராஷ்டிர மாநிலம், நேன்டட் பகுதியில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாராஷ்டிர மாநிலம், நேன்டட் ரயில் நிலையத்திலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.07135) சனிக்கிழமை பகல் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் டிச.1, 8, 22, ஜன.5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

மேலும், டிச.29-ஆம் தேதி இதே மாா்க்கத்தில் சிறப்பு ரயில் (வண்டி எண்.07137) இயக்கப்படுகிறது.

வாரந்தோறும் கொல்லத்திலிருந்து சனிக்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்.07136) திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நேன்டட் சென்றடையும்.

இந்த ரயில் டிச.3, 10, 24, ஜன.7 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

மேலும், இதே மாா்க்கத்தில் சிறப்பு ரயில் (வண்டி எண்.07138) டிச.31-ஆம் தேதி இயக்கப்படும்.

இந்த ரயில் தமிழகத்தின் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT