தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி: ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!

DIN

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்ட மசோதா காலாவதியாகி விடும். எனினும், ஆளுநர் காலம் தாழ்த்தியதால்  மசோதா காலாவதியாகிவிட்டது. 

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதுகுறித்து விளக்கமளிக்க சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். 

நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க அமைச்சருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT