தமிழ்நாடு

செங்கல்பட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி!

29th Nov 2022 04:34 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கிய முருகேஷ், உதயகுமார்,விஜய், ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்

ADVERTISEMENT
ADVERTISEMENT