தமிழ்நாடு

அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: சென்னை மேயர் அறிவிப்பு

DIN

சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் உணவருந்துவதற்காக அமைக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனினும், திமுக ஆட்சியில் அதற்கான நிதி சரியாக ஒதுக்கப்படவில்லை, பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாமன்றக் கூட்டத்தில், அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் கூறியதையடுத்து பேசிய சென்னை மேயர் பிரியா, 'அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில்தான் இருக்கும். அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பாட்டில் உள்ளதோ இனியும் அவ்வாறே தொடரும். பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று (நவம்பர் 28 ஆம் தேதி) மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT