தமிழ்நாடு

இலவச மின்சாரம் பெறும் குடிசைவாழ் மக்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி 

28th Nov 2022 11:44 AM

ADVERTISEMENT

இலவச மின்சாரம் பெறும் குடிசைவாழ் மக்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை. மின் இணைப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை. ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். 

இதையும் படிக்க- தொடரும் ராகிங் கொடுமை: 2-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்!

தமிழகத்தில் 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. டிசம்பவர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும். ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அச்சப்பட வேண்டாம். 

ADVERTISEMENT

ஏற்கெனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சிறப்பு முகாமில் மின் இணைப்பு எண்ணை பெயர் மாற்றமும் செய்யலாம். இலவச மின்சாரம் பெறும் குடிசைவாழ் மக்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டடார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT