தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும்!

28th Nov 2022 02:54 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, 

இன்று முதல் நவ.2 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

படிக்க: குஜராத் தேர்தல்: காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்!

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கொடிவேரி 12, மாக்கினாம்பட்டி, குண்டேரிப்பள்ளம் தலா 8, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, கோவில்பட்டி தலா 6, கீழ் கோதையார், சோத்துப்பாறை தலா 5 செ.மீ மழை பதிவானது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT