தமிழ்நாடு

மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை: உதயநிதி திறந்துவைத்தார்

27th Nov 2022 05:05 PM

ADVERTISEMENT

மெரீனா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க- ஆந்திரத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

இப்பாதை, மெரீனா கடற்கரை நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே 380 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்தில் அமைந்துள்ளது.இந்த பாதையை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி இன்று திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

இந்நிகழ்வின்போது நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இந்நிகழ்ச்சியில் மேயா் ஆா். பிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT