தமிழ்நாடு

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

27th Nov 2022 08:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக எளிய முறையில் தீபத் திருவிழா நடத்தப்பட்டது. நிகழாண்டு தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.

காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னா், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி கோயில் தங்கக் கொடிமரம் அருகே அருள்பாலித்தனர்.

ADVERTISEMENT

அருணாசலேஸ்வரா் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடி மரத்தில், சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபத் திருவிழாவுக்கான ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது இதன்பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

இதையும் படிக்க: வீட்டுவசதி வாரியத்தில் விற்பனை பத்திரம் பெற வட்டி சலுகை தள்ளுபடி

டிசம்பா் 3-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT