மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,511 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,051 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி: மழையால் நிறுத்தி வைப்பு
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நேற்று மாலை 119.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 119.38அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.48 டி.எம்.சியாக உள்ளது.