தமிழ்நாடு

வேலூரில் 9 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட மக்கள்!

DIN

வேலூர் மாவட்டம் ஒடுக்கதூர் அருகே இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 9 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து மக்கள் வனப்பகுதியில் விட்டனர். 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குருவரராஜாபாளையம் கிராமத்தில் நேற்று (24.11.2022) இரவு அங்குள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உடனடியாக இதுகுறித்து ஒடுக்கத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வர தாமதமானதால் பொதுமக்களே மலைப்பாம்பைப் பிடித்து கோணிப்பையில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT