தமிழ்நாடு

இந்தியாவின் பெருமைமிகு முதல்வர்களில் கருணாநிதியும் ஒருவர்: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

28th May 2022 07:18 PM

ADVERTISEMENT

இந்தியாவின் பெருமைமிகு முதல்வர்களில் கருணாநிதியும் ஒருவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கருணாநிதி சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என் இளம் வயதில் கருணாநிதியின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். பன்முகத் தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி. 

என்னுடைய பொது வாழ்வில் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையானது. இந்தியாவின் பெருமைமிகு முதல்வர்களில் கருணாநிதியும் ஒருவர். கருணாநிதி சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் நாட்டில் உள்ள மக்களுக்காக உழைக்கிறோம். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திறகாக வாதாடினேன். 
சொலல் வல்லன் சோர்விலன் அவனை
இகழ்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குரலுக்கு பொருத்தும் கருணாநிதி. தமிழ் சினிமாவின் புதிய போக்கை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கருணாநிதி. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். 

இதையும் படிக்க- முடியாததை முடித்துக் காட்டுபவர் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான்: அமைச்சர் துரைமுருகன்

ADVERTISEMENT

மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. தமிழ்த் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் சிறப்பு. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். தாய் நாடு, தாய் மொழி வளர்ச்சி என்பது அடிப்படையானது. 

நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல, எனது மொழிக்கு ஆதரவானவன். தாய் மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT