தமிழ்நாடு

மருதமலை கோயிலில் சிறுத்தை நடமாட்டம்

28th May 2022 01:10 PM

ADVERTISEMENT

 

மருதமலை கோயிலில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட‌ நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர் கோவில் ஊழியர்கள். 

கோவை மருதமலையில் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். 

இக்கோவில் அதிகாலை 6 மணி முதல் நடை திறக்கப்பட்டு இரவு ஏழு முப்பது மணி வரை கோவில் இயங்கி வருகிறது. மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது.  மருதமலை கோவிலை ஒட்டிய மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. 
இவர்கள் வளர்த்துவரும் நாய்கள் கடந்த சில தினங்களாக மர்மமான முறையில்   காணாமல் போய் உள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து கோவில் மற்றும் மலைவாழ் மக்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். 

அப்பொழுது அதிகாலை 5 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று தங்கரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் வருவது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சி எனவே கோவில் ஊழியர்கள் , மலைவாழ் மக்கள் உள்ளிட்டோருக்கு மிக வேகமாகப் பரவி அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT