தமிழ்நாடு

‘நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

28th May 2022 06:43 PM

ADVERTISEMENT

மக்கள் தலைவராக இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “வாழ்வில் ஒரு பொன்னாள் என எந்நாளும் போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையிலே கலைஞர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களால் கொடூரமாக கலைஞர் கருணாநிதி கைது செய்யபட்டபோது வெங்கையா நாயுடு அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தார். அவர் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைப்பதில் உள்ளதிலேயே பெருமை.

தமிழகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. அண்ணாவிற்குப் பிறகு திமுகவை இறுதி மூச்சு வரை காத்தவர் கலைஞர் கருணாநிதி. இலக்கியம், திரைத்துறை, எழுத்து என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் அவர் தீட்டிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் ஏராளம். அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்கு இன்றைக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எத்தனை சிலை அமைத்தாலும் ஈடாகாது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT