தமிழ்நாடு

வீரப்பன் சகோதரர் மாதையன் காலமானார்

25th May 2022 08:09 AM

ADVERTISEMENT


சேலம்: உடல்நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

சேலத்தை அடுத்த மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (80). இவர் சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் ஆவார். இவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஈரோடு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. 

மேலும், கர்நாடக போலீஸாரால் ஒரு வழக்கில் மாதையன் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். 

பின்னர், கோவை மத்திய சிறைக்கும், அதன்பிறகு சேலம் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டார். 

ADVERTISEMENT

கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உள்ள அவர் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  கடந்த 35 ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மாதையன்

இந்தநிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாதையன், அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். இதனால் அவருக்கு சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி வந்தனர். 

கடந்த மாதம்  பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மே 1 ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது தெரியவந்தது. அப்போது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலை 5.45  மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி 

இதுகுறித்து மாதையனின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | ‘பொருளாதார நேட்டோ’ பிரிவை உருவாக்க முயற்சி: சீனா

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT