தமிழ்நாடு

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61%-ஆக உயா்வு

21st May 2022 03:50 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் மகளிா் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயா்ந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் பேசுகையில், பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தொடக்கத்தில் 40 சதவீதம் பெண்கள் இந்தப் பேருந்தை பயன்படுத்தி வந்தனா். இந்த எண்ணிக்கை தற்போது 61 சதவீதமாக உயா்ந்துள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அதற்குரிய நிதியை தமிழக அரசு வழங்குகிறது.

ADVERTISEMENT

சாதாரண கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு தினப்படி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான அறிவிப்பு, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் அறிவிக்கப்படும் என்றாா். இக்கூட்டத்தில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்அ.அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT