தமிழ்நாடு

மதுரையில் முனியாண்டி கோயில் விழா: 470 ஆடுகள் வெட்டி கறிவிருந்து!

21st May 2022 03:40 PM

ADVERTISEMENT

 

மதுரை: வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோயில் திருவிழாவில் 470 ஆட்டுக் கிடாய்கள் வெட்டி கறி விருந்தும், பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மதுரை திருப்பரங்குன்றம் விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் கழுங்கடி முனியாண்டி சாமி கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.

இரண்டு ஆண்டுங்களுக்கு ஒரு முறை நடைபெறும். 

ADVERTISEMENT

அதன்படி, இந்த ஆண்டுக்கான முனியாண்டி கோயில் 35-ஆவது திருவிழா நடைபெற்றது. 

இதில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய 470 ஆட்டுக் கிடாய்களுடன் பொங்பானை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முனியான்டி கோயில் முன்பு ஆட்டு கிடாய்கள் இரவு முழுவதும் வெட்டப்பட்டது. 

பின்னர், உணவு சமைத்து காலை முதல் இரவு வரை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கறிவிருந்தும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில், பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த முனியாண்டி கோயிலில் வேண்டியது நிறைவேறும் என்றும், கரோனா காலகட்டத்தின் போது கூட எங்கள் வெள்ளக்கல் பகுதிகளில் ஒருவருக்கு கூட கரோனா வந்தது இல்லை என்றும், கோயிலில் முதல் முதலாக எங்கள் பிரச்னை தீர ஒரு ஆட்டுக்கிடா வெட்டி ஆரம்பிக்கப்பட்ட கோயில் திருவிழா, தற்போது 470-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது.

இதையும் படிக்க | மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: மே 24ல் மறியல் போராட்டம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT