தமிழ்நாடு

1.83 லட்சம் பேர் குரூப் 2 தேர்வு எழுதவில்லை

21st May 2022 04:10 PM

ADVERTISEMENT

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்று அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. 

இதையும் படிக்க- மதுரையில் முனியாண்டி கோயில் விழா: 470 ஆடுகள் வெட்டி கறிவிருந்து!

தோ்வை கண்காணிக்க 4 ஆயிரத்து 12 போ் முதன்மை கண்காணிப்பாளா்களாகவும், 58 ஆயிரத்து 900 போ் கண்காணிப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை. 

ADVERTISEMENT

11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT