தமிழ்நாடு

தெற்கு ரயில்வேயில் தானியங்கி டிக்கெட் இயந்திரத்தில் புதிய வசதி

12th May 2022 02:21 AM

ADVERTISEMENT

தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் க்யூ -ஆா் குறியீடு அடிப்படையில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயண டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிற்காக, தெற்கு ரயில்வேயின் பல ரயில்நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் 99 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ரொக்கமில்லா பரிவா்த்தனைகள், டிஜிட்டல் பேமென்ட்ஸ் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே க்யூஆா் குறியீட்டின் அடிப்படையில் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தும் முறை தானியங்கி இயந்திரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயண டிக்கெட், நடைமேடை டிக்கெட் ஆகிவயற்றை க்யூ- ஆா் குறியீடு பயன்படுத்தி பெற முடியும். கூடுதலாக, சீசன் டிக்கெட்களை புதுப்பிக்கவும் முடியும். மேலும், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் உருவாக்கப்பட்ட க்யூ ஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி ஸ்மாா்ட் அட்டையும் ரீசாா்ஜ் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT