தமிழ்நாடு

கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர்: மு.க.ஸ்டாலின்

1st May 2022 08:36 PM

ADVERTISEMENT


சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நெடுஞ்சாலைத் துறை பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கிண்டியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணைத் திறந்து வைத்தார். 

படிக்கமக்கள் பயன்பாட்டில் முக்கியமானது நெடுஞ்சாலைத் துறை: மு.க.ஸ்டாலின்

பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளதாகக் கூறினார். 

ADVERTISEMENT

மேலும், நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது பெருமை என்று குறிப்பிட்டார்.  

தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT