தமிழ்நாடு

இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி: அரசாணை பிறப்பிப்பு

29th Mar 2022 12:15 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த அரசாணை மூலம், விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது.

பாம்புகளை பிடிக்க இருளர் இன மக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலகளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடுமையான விஷமுள்ள நாகம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் போன்ற பாம்புகளை இருளர் இன மக்கள் பிடித்துக் கொடுத்து வந்தனர். இதற்கு அனுமதி கிடைக்காததால், விஷ முறிவு மருந்து தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், விஷமுறிவு மருந்துக்கான விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் இன மக்களுக்கு தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT