தமிழ்நாடு

பட்டாசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

21st Mar 2022 10:56 AM

ADVERTISEMENT


சிவகாசி: பட்டாசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக பட்டாசு தொழிலை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும் பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் வெம்பகோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழன் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் காத்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனால் வெம்பகோட்டை, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ மூலம் 33,247 பேர் பயன்: பேரவையில் முதல்வர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT