தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் ரூ.400 கோடியில் மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா: மு.க. ஸ்டாலின்

DIN


ராணிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.400 கோடியில் மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

ராணிப்பேட்டையில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் ஒரே நாளில் 71,000 பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் 250 ஏக்கரில்  மாபெரும் காலணி தயாரிப்புப் பூங்கா அமைக்கப்படும்.

புதிதாகக் கட்டப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் இன்று திறக்கப்பட்டுளள்து. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 24,000 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

6 கோயில்கள் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் என்னென்ன நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம் என்று முதல்வர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT