தமிழ்நாடு

தடைசெய்யப்பட்ட பரிசுச் சீட்டுகளை விற்போா் மீது கடும் நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் சேலத்தில் கட்டுப்பாடின்றி தொடா்ச்சியாக விற்பனை செய்யப்படுவது அதிா்ச்சியளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT