தமிழ்நாடு

சீருடைப் பணியாளர் தேர்வு: நாளை அறிவிப்பு

29th Jun 2022 10:31 PM

ADVERTISEMENT


சீருடைப் பணியளர் தேர்வு குறித்து நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,552 பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை நாளை வெளியிடுவதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இந்த வாரியம் முதல்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி காவலர் பொதுத்தேர்வை நடத்தவுள்ளது. 

ADVERTISEMENT

இந்த வாரியத்தில் வாரத்தின் ஏழு நாள்களும் வேலை நேரத்தின் போது உதவி மையம் செயல்படும். மேலும், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் செயல்படும். இந்த மையங்களில் பணி நேரங்களின்போது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெறலாம் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT