தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு 

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை  வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 2,593 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 106 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை105.40 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 72.01டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT