தமிழ்நாடு

திருப்பூரில் நிதி நிறுவன அதிபர் குத்திக்கொலை

29th Jun 2022 02:45 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையத்தில் வசித்து வந்த நிதி நிறுவன அதிபர் மர்ம நபர்கள் புதன்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சிட்கோ தொழிற்போட்டை அருகில் உள்ள செந்தில்நகரில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன்(30). சொந்தமாக ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர், மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியன் வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நடிகை மீனா கணவா் காலமானாா்

இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும், அவரது வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவந்தது. 

மேலும், அவரை தொழில் போட்டி காரணமாக கொலை செய்தனரா அல்லது வேறு காரணமாக என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT