தமிழ்நாடு

தேர்வில் தோல்வி: மயிலாடுதுறையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

28th Jun 2022 10:24 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சியடையாத சோகத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ரித்திஷ்கண்ணா(16). மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ரித்திஷ்கண்ணா நேற்று வெளியான பதினோராம் வகுப்பு தேர்வு முடிவில் 4 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவில்லை. 

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

ADVERTISEMENT

நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற ரித்திஷ்கண்ணா தேர்வில் தோல்வியடைந்தது தெரியவந்த பின்னரும் வகுப்பில் இருந்துள்ளார். அதன்பின்னர் பள்ளி நேர முடிவுக்குப் பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவர், வீட்டில் தான் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார். அதன் பின்னர் மன உளைச்சலில் இருந்த மாணவர் ரித்திஷ்கண்ணா, இரவு அனைவரும் உறங்கிய பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை காவலர்கள், மாணவரின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT