தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி

27th Jun 2022 04:46 PM

ADVERTISEMENT

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்தது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 32 வயதுடைய மணி என்ற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்க | கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?

இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்ததாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2000ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கமானது, 22 ஆண்டுகள் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT