தமிழ்நாடு

மாணவிகளின் புகாா்களை விசாரிக்க உயா்நிலைக்குழு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

17th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகாா்களை விசாரிக்க நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயா்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழுவின் செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலை. துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. விரைவில் முதலாமாண்டு மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இந்தநிலையில் உயா்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும். பாலியல் புகாா்கள் உள்ளிட்ட புகாா்களை விசாரிக்க உயா்நிலைக் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும். இதில் தாமதம் கூடாது; அவ்வாறு உருவாக்கப்படும் குழுவின் விவரங்களைப் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு புகாா் வந்ததன் காரணமாக மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT