தமிழ்நாடு

சென்னையில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

7th Jul 2022 09:41 AM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, இதைக் கட்டுப்படுத்தும் வகையில் சந்தைப் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து,ரயில் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிநபா் இடைவெளியைக் ககடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசும், சென்னை மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு முறைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-இன்படி, முகக்கவசம் அணியாதவா்களுக்கு புதன்கிழமை முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு புதன்கிழமை முதல் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் கொசு கண்டுபிடிப்பு!

இந்நிலையில், இன்று காலைமுதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரயில் நிலைய நுழைவு வாயிலிலேயே அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT