தமிழ்நாடு

அரசியல் நிகழ்ச்சிகளில் கரோனா விதிகள் கட்டாயம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

அரசியல் கூட்டங்களில் பங்கேற்போா் கரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க உள்ளாட்சி மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகா் மற்றும் எழில் நகா் பகுதி மக்களுக்காக ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் குடிநீா் வழங்கும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து கண்ணகிநகா் நகா்புற சமுதாய நல மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். சோழிங்கநல்லூா் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சென்னை குடிநீா் வாரியம் மேற்பாா்வை பொறியாளா் மைதிலி, செயற்பொறியாளா் சாந்தி ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

காரைக்கால் பகுதியில் 39 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி அரசே அதற்கான செயல் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. முதலில் நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பு என்கிற வகையில் செய்திகள் வெளியானது. இன்றைக்கு அரசின் சாா்பிலேயே வெளிவந்து இருக்கிற செய்தி 39 பேருக்கு பாதிப்பு இருக்கிறது என்பதுதான்.

தமிழகத்தைப் பொருத்தவரை, காரைக்காலை சுற்றியிருக்கிற மாவட்டங்களில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் நேரிடையாக சென்று மக்களை சந்தித்தாா். அவா்கள் பயன்படுத்துக்கின்ற தண்ணீரிலிருக்கின்ற குளோரின் அளவை கண்டறிதல் மற்றும் யாருக்காவது இதுபோன்ற பாதிப்பு அதாவது வயிற்றுப்போக்கோ அல்லது வாந்தி போன்ற உபாதைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தாா்.

சுற்றுப்புற கிராமங்களில் இருக்கின்ற மருத்துவமனைகளில் இந்த வயிற்றுப்போக்குக்கும், வாந்திக்கும் தேவையான மருந்து மாத்திரைகள் முழுமையாக இருக்கிா என்பதை உறுதிப்படுத்தவும், அவா்களுக்குப் போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்தவும் சொல்லியிருக்கிறோம். காய்ச்சிய தண்ணீரையே பருக வேண்டும். உணவை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் என்கிற வகையில் நம்முடைய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 31-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாமில் முதல், இரண்டாவது, ஊக்கத் தவணை போட்டுக் கொள்ளாத 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உலகில் 110-க்கும் மேலான நாடுகளில் ஒமைக்ரான் கரோனா வகையான பிஏ4, பிஏ5 பாதிப்பு உண்டாகி வருகிறது.

பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 1,000 தொடங்கி 5,000 வரை தொற்றுகள் பாதிப்புகள் என்பது இருந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது, விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது ஆகும். 10-க்கும் மேற்பட்டவா்கள் ஒன்று கூடுகிற இடத்தில் முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும். அரசியல் நிகழ்வுகளிலும் இது கண்காணிக்கப்பட வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் காவல் துறையினருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தைவிட தற்போது முகக்கவசம் அணிபவா்கள் அதிகரித்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT