தமிழ்நாடு

மன்னாா்வளைகுடா பகுதியில் பலத்த சூறைக் காற்று: மீன்பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு தடை

6th Jul 2022 09:55 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் சூறைக் காற்று வீசி வருவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை வித்துள்ளனர். இதனால் துறைமுகத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் அடுத்தடுத்து நில அதிா்வு உணரப்பட்டுள்ளதால், மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியில் தொடர்ந்து சூறை காற்று வீசுவதால் ஆழ்கடல் பகுதியில் அலையின் வேகம் அதிகரித்து கானப்படுகிறது. 

இதையும் படிக்க | 10.371 ஆசிரியர் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு!

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினர் தடை வித்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரையில் பாக்நீரிணை பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், பாம்ம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர். 

இதனால் மாவட்டம் முழுவதிலும் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதே போன்று ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க செல்லும் ஆயிரக்கனக்கான நாட்டுப்படகுகள், பிளாஸ்டிக் படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகு, பிளாஸ்டிக் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT