தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது?

5th Jul 2022 01:22 PM

ADVERTISEMENT

சென்னையில் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதனிடையே சென்னையில் கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 677 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 7 லட்சத்து 50 ஆயிரத்து 075 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,534 ஆக அதிகரித்துள்ளது. 9,068 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

நேற்று(திங்கள்) கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,058 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாளில் 500 என்ற அளவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 862 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக உள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) சென்னையில் 1,066 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 2,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT