தமிழ்நாடு

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும்: போக்குவரத்துத்துறை 

DIN

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.  
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் இயக்கும் சாதாரண பயணக்கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமின்றி பயணிக்க கடந்த 8.5.2021 முதல் அனுமதிக்குமாறு மாநகரப் போக்குரத்துக்கழகம் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கையின் வழி ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. எனினும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் பயணிக்க வரும்போது அவர்களிடம் மரியாதையின்றை நடத்துநர்கள் நடந்துக்கொள்வதாக புகார்கள் தலைமையகம் மற்றும் தலைமைச்செயலக போக்குவரத்து துறையில் அவ்வப்போது பெறப்படுகிறது. 

எனவே மகளிர் மாநகரப் போக்குரவத்துக்கழக பேருந்துகளில் எந்தவித பயண அட்டை இல்லாமலும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வரும்போது மாநகரப் போக்குவரத்துக்கழக அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் போக்குவரத்துத்துறையின் நிலையான இயக்க நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சுற்றறிக்கை வழி மீண்டும் உத்தரவிடப்படுகிறது. 
எனவே அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தத்தம் பணிமனை சார்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளை குறிப்பாக பெண்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் ஆகியோறை பேருந்து பயணத்தின்போது மரியாதையுடனும், கனிவுடனும், மேற்குறிப்பிட்ட நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் அவர்களை உரிய நிறுத்தத்தில் ஏற்றி/இறக்கிட அறிவுறுத்திடுமாறு இச்சுற்றறிக்கை வழி மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT