தமிழ்நாடு

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும்: இபிஎஸ் தரப்பு

3rd Jul 2022 01:53 PM

ADVERTISEMENT

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இபிஎஸ் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆய்வு செய்து பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிவருவதாக விமர்சித்தார். 

ADVERTISEMENT

படிக்கபொதுக்குழு நடக்காது, நடந்தாலும் செல்லாது: ஓ.பி.எஸ். தரப்பு

சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு பொதுக்குழு கூட்டம் கட்டாயம் நடைபெறும் என்றும், இதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும், எம்ஜிஆர் ஜெயலலிதவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என சுட்டிக்காட்டிய விஸ்வநாதன், பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதில் எந்த சிக்கலும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT