தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: தினசரி பாதிப்பு 2,385-ஆக உயா்வு

2nd Jul 2022 03:56 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,385 ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,025 பேருக்கும், செங்கல்பட்டில் 369 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கையும் 12,158- ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை தகவல்படி 1,321 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 27,386-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொருபுறம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், வெள்ளிக்கிழமை 32,960 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அடுத்தகட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT