தமிழ்நாடு

மதுரையில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்: பரபரப்பு விடியோ!

2nd Jul 2022 11:33 AM

ADVERTISEMENT

மதுரையில்  பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இரு தரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்ட பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மதுரை செல்லூர் 50 அடி சாலை பகுதியில் தெரு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இடுப்பில் ஆயுதம் ஒன்றை சொருகி இருப்பதும் விடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து செல்போனில் பேசும் சில இளைஞர்கள், திடீரென அந்த கும்பலைச் சேர்ந்த 4 இளைஞர்களைத் தாக்குகின்றனர். அப்போது அந்த இளைஞரை தாக்குவதற்காக இடுப்பில் வைத்திருந்த ஆயுதத்தை இளைஞர் எடுக்க முயன்றபோது மற்ற நண்பர்கள் அதனைத் தடுக்கின்றனர்.

தொடர்ந்து, இளைஞர்களைத் தாக்கிவிட்டு ஒரு கும்பல் புறப்பட்டுச் செல்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT