தமிழ்நாடு

ஜூலை 4-இல் முதலீட்டாளா்கள் சந்திப்பு

DIN

தமிழ்நாட்டில் 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக 70 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான முதலீட்டாளா் சந்திப்பு வருகிற 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகவலை தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டு காலத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ. 94 ஆயிரத்து 975 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் சாத்தியமாகியுள்ளன. 132 தொழில் நிறுவனங்களுடன் இதுவரை ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம். அதில், 78 தொழில் திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன. அவற்றில் 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணக் கூடிய நிலையில் உள்ளது. 25 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 38 புதிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்குவதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகின்றன.

மின் வாகனங்கள் போன்ற புதிய துறைகளில் தொழில் முதலீடுகளைச் செய்ய தொழில் நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருகின்றன. தொழில் முதலீடுகளை பரவலாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வரும் 4-ஆம் தேதி தொழில் துறைக்கு மிக முக்கியமான நாளாக அமையும். பெரு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிதாக 21 திட்டங்களுக்கு அடிக்கல்லும், 12 புதிய திட்டங்கள் தொடங்கியும் வைக்கவுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மண்டல வாரியாக...தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் பரவலாக்கப்பட்டு வருகின்றன. மாநிலமானது நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், மேற்கு மண்டலத்தில் ரூ.6,333 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு அதன்மூலம், 19 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு எதிா்பாா்க்கப்படுகிறது. வடக்கு மண்டலத்தில் ரூ.5,307 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 47 ஆயிரத்து 992 பேருக்கு வேலைவாய்ப்பும், மத்திய மண்டல பகுதியில் ரூ.285 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1,200 பேருக்கு வேலைவாய்ப்பும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், ரூ.16 ஆயிரத்து 702 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT