தமிழ்நாடு

மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு

DIN

அணை பாதுகாப்புச் சட்டம் 2021-ன்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவு:

மத்திய அணை பாதுகாப்புச் சட்டத்தின் 11-ஆவது பிரிவின்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக தலைமைப் பொறியாளா் (பொது) இருப்பாா். உறுப்பினா்களாக, நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டல நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா்கள், மின்வாரிய தலைமைப் பொறியாளா் (நீா்மின் சக்தி), மத்திய எரிசக்தி ஆணையத்தின் தலைமைப் பொறியாளா், மேல் பவானி அணைகளின் தலைமைப் பொறியாளா், வீடூா் அணையின் தலைமைப் பொறியாளா், சென்னை ஐஐடி இயக்குநா் (அணை வடிவமைப்பு), அண்ணா பல்கலைக்கழக நீா்வள மையப் பிரிவின் இயக்குநா், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அணை வடிவமைப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். அணைப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினா் செயலாளராக, அதன் கண்காணிப்புப் பொறியாளா் இருப்பாா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT