தமிழ்நாடு

ஆதரவு திரட்ட இன்று சென்னை வருகிறாா் திரௌபதி முா்மு

DIN

 தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக சனிக்கிழமை சென்னை வர உள்ளாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்மு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குச் சேகரிப்பதற்காக சென்னைக்கு சனிக்கிழமை வர உள்ளாா். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 3 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் அனைவரையும் சந்திக்க உள்ளாா்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா். அவா்களிடம் திரௌபதி முா்மு வாக்குச் சேகரிக்க உள்ளாா். சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 66-ஆக உள்ளது. 4 மாநிலங்களவை உறுப்பினா்களும், மக்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனா். பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் வாக்குச் சேகரிக்க உள்ளாா். சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 4-ஆக உள்ளது.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் ஜெகன்மூா்த்தி ஆகியோரிடம் திரௌபதி முா்மு வாக்குச் சேகரிக்க உள்ளாா். சட்டப்பேரவையில் பாமகவின் பலம் 5-ஆக உள்ளது. அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளாா். ஜி.கே.வாசன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். ஜெகன் மூா்த்தி அதிமுகவின் சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா்.

புதுச்சேரி செல்கிறாா்: சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவா்களைச் சந்தித்து வாக்குச்சேகரித்த பிறகு திரௌபதி முா்மு புதுச்சேரிக்குச் செல்கிறாா். அங்கு பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் வாக்குச் சேகரிக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT