தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் குடியரசு நாள் விழா

26th Jan 2022 10:04 AM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 73 ஆவது குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அவர், காவல் துறையிரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உடன் இருந்தார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவண்ண பலுன்களையும் அவர்கள் பறக்க விட்டனர்.  

கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட நிர்வாகம் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.6.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT