தமிழ்நாடு

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்

26th Jan 2022 11:46 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது. 

நாடு முழுவதும் இன்று நாட்டின் 73வது குடியரசு நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி

ADVERTISEMENT

அதனை முன்னிட்டு, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

முன்னதாக வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடிவைக்கப்பட்டு ஸ்ரீநடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டு பின்னர் மேளதாளங்களும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT