தமிழ்நாடு

மானாமதுரை ஸ்ரீ அப்பன் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா

26th Jan 2022 12:31 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. 

இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றதை முன்னிட்டு அதைத்தொடர்ந்து நடந்த மண்டல பூஜை விழாவையொட்டி கோயில் வளாகத்தில்   கலசங்களில் புனித நீர் நிரப்பி வைத்து  யாகம் வளர்த்து சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஸ்ரீதேவி - பூதேவி சமேதமாய் உற்சவர் அப்பன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி

ADVERTISEMENT

அன்பின் யாகத்தின் நிறைவாக பூர்ணாஹூதியாகி கலச நீரால் மூலவர் அப்பன் சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான ஆச்சாரியார்கள் மண்டல பூஜை விழாவை நடத்தி வைத்தனர்.

மண்டல பூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அப்பன் சீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT