தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: தமிழக ஆளுநர் உரை

25th Jan 2022 04:45 PM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73-வது குடியரசு நாளையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதில், ஆளுநர் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நமது அவசரத் தேவை. அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எதிர்மறை வேறுபாடுகள் கவலையை தோற்றுவிக்கின்றன.

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளால் சேர முடியாது. அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கையாக இருக்கின்றன.

ADVERTISEMENT

மேலும், நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகதான் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும், பெருமையையும் மீண்டும் பெற உழைப்போம் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT